மாவட்ட செய்திகள்,மாநில செய்திகள்,தேசிய செய்திகள் மற்றும் உலக செய்திகள்

Comments

Friday, August 17, 2018

காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் காவிரி ஆற்றின்

சேலம்: காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் அங்குள்ள கபினி, கேஆர்எஸ் உள்ளிட்ட அணைகள் நிரம்பின. இதையடுத்து தமிழகத்துக்கு உபரி நீரை திறந்துவிடும் நிலை ஏற்பட்டது. கர்நாடக அணையில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீர் காவிரி ஆற்றுக்கு திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து காவிரி கரையோர பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.




மேட்டூர் அணையிலிருந்து விநாடிக்கு 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரி கரையோர பகுதிகளில் தொடர்ந்து வெள்ள அபாயம் நீடித்து வருகிறது.மேட்டூரிலிருந்து எடப்பாடி செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது

காவிரி கரையோர பகுதியான பூலாம்பட்டி, கேனேரிப்பட்டி, மணக்காடு, காவிரிப்பட்டி அக்ர ஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 50 வீடுகளுக் குள் ஆற்று வெள்ளம் புகுந்தது. இதனால், அப்பகுதி களைச் சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங் களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 250 ஏக்கர் விவசாய நிலத்தில் வெள்ளம் புகுந்து, பயிர்கள் சேதமடைந்தன. கர்நாடக மாநிலம் கேஎஸ்ஆர், கபினி அணைகளில் இருந்து 2.10 லட்சம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வரும் நிலையில், மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், காவிரி கரையோரப் பகுதி மக்கள் வெளியேறி உறவினர்கள் வீடுகளிலும் அரசின் பாதுகாப்பு உதவி மையங்களிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். 

அணைகளிலிருந்து வெளியேறும் நீர் அதி கரித்து வருவதால் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. சேலம் ஆட்சியர் ரோஹிணி தலைமையிலானஅதிகாரிகள் மேட்டூர் இடது, வலது காவிரி கரைகளில் பாதுகாப்பை பலப்படுத்தியும், உயிர் காக்கும் கருவிகளுடன் மீட்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ள னர். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை காவிரி ஆற்றின் நீர்வரத்து குறித்து தலைமை செயலக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப் படுகிறது.



Share:
Location: Tamil Nadu, India

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support